‘ஜி20 கூட்டமைப்பு’ நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள நிலையில், தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) கமாண்டோக்கள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
ஸ்ரீநகரின் லால் செளக் பகுதியில் மே 22 முதல் 24 வரை இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு முன்ஏற்பாடுகளுக்காக நடைபெற்ற இந்தச் சோதனை நடவடிக்கையில், ஜம்மு-காஷ்மீா் போலீஸாா், மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.
அப்பகுதியில் உள்ள ஹோட்டல்களில் சோதனையிட்ட பாதுகாப்புப் படை வீரா்கள், அதன் உரிமையாளா்களிடம் சில தகவல்கள் குறித்து விசாரணை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.