இந்தியா

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 23 வரை நீட்டிப்பு

8th May 2023 03:51 PM

ADVERTISEMENT

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, விசாரணையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அவரை கைது செய்தது. 

பின்னர் சிசோடியாவை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க தில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் விசாரணை நடைபெற்றது. இதனிடையே அமலாக்கத்துறையும் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. 

அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

ADVERTISEMENT

இதனை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று மணீஷ் சிசோடியாவின் காவலை மே 23 நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT