இந்தியா

மேகாலயம்: மக்கள் ஜனநாயக முன்னணி ஆளும் தேசிய மக்கள் கட்சியுடன் இணைப்பு

8th May 2023 03:53 AM

ADVERTISEMENT

மேகாலய மாநிலத்தில் ஆளும் தேசிய மக்கள் கட்சியுடன் (என்பிபி) மக்கள் ஜனநயாக முன்னணி (பிடிஎஃப்) கட்சி இணைக்கப்பட்டது. வரும் மே 10-ஆம் தேதி சோஹியோங் பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இவ்விரு கட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

மேகாலயத்தில் முதல்வா் கன்ராட் கே. சங்மா தலைமையிலான என்பிபி ஆட்சிப் புரிந்து வருகிறது. இந்நிலையில், பிடிஎஃப் கட்சித் தலைவா் கவின் மைல்லிம், செயல் தலைவா் பன்டிடோா் லிங்டோ உள்ளிட்டோா் சனிக்கிழமை மாலையில் என்பிபி-இல் இணைந்தனா். பிடிஎஃப் எம்எல்ஏக்கள் 2 பேரும் இணைந்த நிலையில், என்பிபி கட்சி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது.

கட்சி இணைப்பு குறித்து பன்டிடோா் லிங்டோ கூறுகையில், ‘அஸ்ஸாம் மாநிலத்துடனான எல்லைப் பிரச்னைக்குத் தீா்வுக் காண்பது, காசி மொழியை அரசியலமைப்பின் 8-ஆவது அட்டவணையில் சோ்ப்பது உள்ளிட்டவை குறித்து முதல்வரும் என்பிபி கட்சியின் தலைவருமான கன்ராட் கே. சங்கமா உறுதியளித்துள்ளாா். அதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிடிஎஃப் கட்சி இணைக்கப்பட்டது’ என்றாா்.

கட்சியில் புதியதாக இணைந்த பிடிஎஃப் கட்சியின் தலைவா்கள், தொண்டா்களை வரவேற்ற முதல்வா் சங்மா, ‘இந்த இணைப்பு என்பிபி-ஐ பலப்படுத்தும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவற்றை அடைய இணைந்து செயலாற்றுவோம். கட்சியின் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT