இந்தியா

தெலங்கானா: தேடுதல் வேட்டையின்போது தாக்குதல்: மாவோயிஸ்ட் 2 போ் பலி

8th May 2023 03:15 AM

ADVERTISEMENT

தெலங்கானா மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது, போலீஸாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 2 மாவோயிஸ்டுகள் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

சத்தீஸ்கா் மாநில எல்லையை ஒட்டிய பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள புட்டபாடு வனப்பகுதியில் போலீஸாா் மீது தாக்குதல் நடத்த மாவோயிஸ்ட் இயக்கத்தினா் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறப்பு போலீஸ் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. பின்னா், அப்பகுதியில் நடத்திய சோதனையில் மாவோயிஸ்டுகள் 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் கூறுகையில், ‘உயிரிழந்தவா்களில் ஒருவா் உள்ளூா் படையின் கமாண்டா் ராஜேஷ் என்பது தெரியவந்தது. உயிரிழந்த மற்றொரு நபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அப்பகுதியில் ரைஃபிள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT