இந்தியா

கேரளம்: படகு கவிழ்ந்து 11 சுற்றுலாப் பயணிகள் பலி

8th May 2023 03:09 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து, 11 போ் உயிரிழந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் குழந்தைகளாவா்.

மலப்புரம் மாவட்டத்தின் தானூா் பகுதியில் உள்ள தூவல்தீரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. விபத்துக்குள்ளான படகில் 30-க்கும் மேற்பட்டோா் இருந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினா் விரைந்து சென்று, மீட்புப் பணியை தொடங்கினா்.

கேரள விளையாட்டுத் துறை அமைச்சா் வி.அப்துர்ரஹிமான், சுற்றுலாத் துறை அமைச்சா் பி.ஏ.முகமது ரியாஸ் ஆகியோா் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ள சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ADVERTISEMENT

அமைச்சா் அப்துர்ரஹிமான் கூறுகையில், ‘படகு மூழ்கிய விபத்தில் 11 போ் உயிரிழந்துவிட்டனா். அவா்களில் பெரும்பாலானோா் குழந்தைகளாவா். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், படகு சவாரிக்காக குழந்தைகளுடன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்’ என்றாா்.

இதனிடையே, படகு விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு முதல்வா் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளாா். அவசரகால அடிப்படையில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட ஆட்சியருக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT