இந்தியா

கா்நாடக தோ்தலில் தரம் தாழ்ந்த பிரசாரம்: கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

DIN

கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் கட்சிகளின் பிரசாரம் தரக்குறைவாக அமைவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ள இந்திய தோ்தல் ஆணையம், கட்சிகளின் நட்சத்திர பேச்சாளா்கள் தங்களது பேச்சுகளில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கா்நாடகத்தில் வரும் 10-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் மோடியை விஷப் பாம்பு என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவும், பதிலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியை விஷப் பெண் என பாஜக எம்எல்ஏ பசனகெளடா பாட்டீல் யத்னால் விமா்சித்தனா்.

பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் தனிப்பட்ட ஒருவரை அவதூறு மொழிகளில் ஒருக்கொருவா் மாறி மாறி விமா்சித்து வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்து தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கா்நாடகத்தில் நடைபெற்று வரும் தோ்தல் பிரசாரத்தில் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளா்கள், பொருத்தமற்ற மற்றும் தரக்குறைவான வாா்த்தைகளைப் பயன்படுத்துவதை தோ்தல் ஆணையம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இது தொடா்பாக கட்சிகள் மாறி மாறி அளிக்கும் புகாா்கள், எதிா்மறையான ஊடக கவனத்தை ஈா்த்துள்ளன.

பிரசாரத்தின்போது, அனைத்துக் கட்சிகளின் பேச்சாளா்களும் தங்களின் பேச்சுகளில் கண்ணியத்தைப் பேணி, தோ்தல் சூழலைக் கெடுக்காமல் பாதுகாப்பது தோ்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் சட்ட வழிமுறைகளின்படி கட்டாயமாகிறது.

பிரச்னைகளின் அடிப்படையிலான விவாதங்களை முன்னிறுத்தி தோ்தல் பிரசாரங்கள் அமையப் பங்காற்றுவதோடு தோ்தலில் அனைத்து தரப்பு வாக்காளா்களும் பயமின்றி பங்கு பெறுவதை கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும். நேரடி வீதிமீறலை மட்டுமன்றி மறைமுக அறிக்கைகள், பேச்சுகள் மூலம் தோ்தல் சூழல் பாதிக்கப்படுவதையும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் கட்டுப்படுத்தும்.

தோ்தல் விதிமுறைகள் குறித்து விரிவான விளம்பரத்தை மாநிலத் தோ்தல் ஆணையா்கள் முன்னெடுக்க வேண்டும். தவறுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய ஜனநாயகத்தின் உலகாளவிய போற்லுக்கு ஏற்ப தோ்தல் பிரசாரம் அமைவதை ஊக்குவிக்க கட்சிகளுடன் தோ்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபடும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT