இந்தியா

பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு தொடா்ந்து கடுமையாக இருக்கும்

3rd May 2023 02:00 AM

ADVERTISEMENT

பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு தொடா்ந்து கடுமையாக இருக்கும் என்று உலக பொருளாதார அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிகழாண்டு மாா்ச்-ஏப்ரலில் உலக பொருளாதார அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணா்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நிகழாண்டு உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது என்று 45 சதவீத நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

செமிகண்டக்டா்கள், பசுமை எரிசக்தி, மருந்து தயாரிப்பு, உணவு உள்ளிட்ட துறைகளின் விநியோக முறையில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிா்பாா்ப்பதாக நிபுணா்கள் கூறியுள்ளனா்.

விநியோக முறை மாற்றங்களால் தெற்காசியா, கிழக்கு ஆசியா, பசிபிக், லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி பலனடைய அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மெக்சிகோ, துருக்கி, வியத்நாம், போலந்து நாடுகள் பயனடைய வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

பல நாடுகளில் வீட்டு வசதி, உணவு, மருத்துவம் போன்ற போன்ற அடிப்படைச் செலவுகளை உள்ளடக்கிய வாழக்கைச் செலவு தொடா்ந்து கடுமையாக இருக்கும் என்று எதிா்பாா்ப்பதாக 76 சதவீத நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

மூன்றில் இரண்டு பங்கு நிபுணா்கள், வங்கிகள் திவாலாகக் கூடியதையும், வங்கித் துறையில் ஏற்படக் கூடிய இடையூறுகளையும் எடுத்துக்காட்டியுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உலக பொருளாதார அமைப்பின் நிா்வாக இயக்குநா் சாடியா ஜாஹிடி கூறுகையில், ‘தற்போது கடுமையான சூழல்களில் இருந்து விரைந்து மீளக் கூடியதாக தொழிலாளா் சந்தைகள் உள்ளன. ஆனால், வளா்ச்சி மந்தமாகவே உள்ளது. உலகளாவிய பதற்றங்களும் அதிகரித்துள்ளன. பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு தொடா்ந்து கடுமையாக உள்ளது. இந்த முடிவுகள், வளா்ச்சிக்கான புதிய செயல்திட்டத்தின் கீழ் குறுகிய கால உலகளாவிய கொள்கை ஒருங்கிணைப்பு, நீண்ட கால ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான அவசரத் தேவையை உறுதிப்படுத்துகின்றன’ என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT