இந்தியா

நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 3,720 ஆகக் குறைந்தது!

3rd May 2023 11:28 AM

ADVERTISEMENT

 

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,720 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக குறைந்து வருகின்றது. கரோனாவுக்கு மேலும் 20 பேர் இறந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 5,31,584 ஆக உள்ளது. மேலும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40,177 ஆகக் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT