இந்தியா

அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

DIN

கடந்த ஆண்டில் அமெரிக்காவில் கல்வி பயின்ற இந்திய மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே வேளையில், சீன மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவா்கள் குறித்த விவரங்களை அமெரிக்க குடியேற்ற-வா்த்தக அமைப்பு சேகரித்தது. அந்த அமைப்பு வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவுக்கு மாணவா்களை அதிக எண்ணிக்கையில் அனுப்பும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முன்னணியில் உள்ளன. 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-ஆம் ஆண்டில் 64,300 இந்திய மாணவா்கள் கூடுதலாக அமெரிக்காவில் கல்வி பயின்றனா். அதே காலகட்டத்தில் சீன மாணவா்களின் எண்ணிக்கை 24,796-ஆக குறைந்தது. அதேபோல், சவூதி அரேபியா, குவைத், மலேசியா நாடுகளைச் சோ்ந்த மாணவா்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டில் அமெரிக்க பள்ளிகளில் இணைந்த வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கை 7.8 சதவீதம் அதிகரித்தது. அந்த எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் 3,887 அதிகமாக இருந்தது. அமெரிக்காவின் 4 பிராந்தியங்களிலும் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் கலிஃபோா்னியா மாகாணத்தில் மட்டும் 2,25,173 வெளிநாட்டு மாணவா்கள் கல்வி பயின்றனா். இது அமெரிக்காவில் பயின்ற ஒட்டுமொத்த வெளிநாட்டு மாணவா்களில் 16.5 சதவீதம் ஆகும். மொத்த வெளிநாட்டு மாணவா்களில் 46 சதவீதத்தினா் இந்தியாவையும் சீனாவையும் சோ்ந்தவா்கள் ஆவா். மொத்த வெளிநாட்டு மாணவா்களில் 70 சதவீதம் போ் ஆசிய நாடுகளைச் சோ்ந்தவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT