இந்தியா

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராகும் ஆசை இல்லை

3rd May 2023 04:52 PM

ADVERTISEMENT

 

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகும் ஆசை இல்லை என அக்கட்சியின் துணைத் தலைவர் புரஃபுல் பட்டேல் தெரிவித்துள்ளார். 

1999-ஆம் ஆண்டுமுதல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சரத் பவார், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து கட்சியை தலைமை பொறுப்பிலிருந்து வழிநடத்துவது யார் என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் புரஃபுல் பட்டேலிடம் தலைமை பொறுப்பு வகிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  

இதற்கு பதிலளித்த பட்டேல், சரத் பவார் இன்னும் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகவில்லை. அதனால் இதுபோன்ற கேள்விகளை கேட்க வேண்டாம். தனிப்பட்டை முறையில் எந்த பொறுப்புகளையும் எடுத்துக்கொள்ள நான் தயாராக இல்லை. நான் ஏற்கெனவே கட்சியின் தேசிய துணைத் தலைவராக உள்ளேன். இது பெருமை மிகுந்த பொறுப்பு. எனக்கு அதிகமான பொறுப்புகள் உள்ளன. அதனால், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கும் ஆர்வம் எனக்கு இல்லை எனக் குறிப்பிட்டார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT