இந்தியா

ஒரே மரத்தில் 14 வகையான மாம்பழங்கள்.. அசத்தும் விவசாயி

3rd May 2023 05:48 PM

ADVERTISEMENT


ராஜ்கோட்: மாம்பழத்தின் சுவை பிடிக்காதவர்கள் மிகச்சிலரே இருப்பர். பழங்களில் வாழையைப் போல அதிக வகைகளைக் கொண்டதாகவும் மாம்பழம் உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவை, வடிவம். இவ்வாறு 14 வகையான மாம்பழங்கள் ஒரே மரத்தில் காய்க்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா?

குஜராத் மாநிலம் அம்ரேலியைச் சேர்ந்த 70 வயதாகும் மாம்பழ விவசாயி உகபாய் பட்டி, தனது அதீத முயற்சியால், இப்படி 14 வகையான மாம்பழங்கள் காய்க்கும் ஒரு மாம்பழத் தோட்டத்தையே ஒரே மரத்துக்குள் கொண்டு வந்துள்ளார்.

தனது வீட்டின் வாயிலில் அவர் வைத்திருக்கும் இந்த மாம்பழ மரம், ஹோலி பண்டிகை முதல் தீபாவளி பண்டிகை வரை அனைத்து பண்டிகைகளுக்கும் இனிப்பான கனிகளை வழங்கி மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி வருகிறது.

இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால், இந்த மாம்பழ மரத்தில் புதிய வகைகளை சேர்க்கவும் தொடர்ந்து முயன்று வருகிறார் பட்டி.

ADVERTISEMENT

இந்த மரத்தில் காய்க்கும் பழங்கள் எதுவும் விற்பனைக்கு வராது என்றும், சொந்த பயன்பாட்டுக்காக மட்டுமே என்று கூறும் பட்டி, இதற்கு முன்பு 44 வகையான மாம்பழங்களைக் காய்க்கும் ஒரே மரத்தை வைத்திருந்ததாகவும், அது இயற்கையாகவே அழிந்துவிட்டதாகவும் கவலையோடு கூறுகிறார்.

வரலாற்றில் தான் படித்த பல வகையான மாம்பழங்கள் தற்போது விளைச்சலே இல்லாமல் போய்விட்டது. சில மாம்பழங்களைப் பற்றி விவரங்களே இல்லை. அதையும் தான் தேடி வருவதாகவும் கூறுகிறார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT