பரமத்தி வேலூா் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
இப்பள்ளி மாணவா் மதன்குமாா் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளாா். மாணவி ஹரிணி 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளாா். மாணவி சுபஸ்ரீ 500-க்கு 492மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளனா். மாணவி அனுசியா 500-க்கு 491 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடம் பெற்றுள்ளாா்.
மேலும் 495 மதிப்பெண்களுக்கு மேல் 2 பேரும், 490 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேரும், 485 மதிப்பெண்களுக்கு மேல் 11 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 20 பேரும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 33 பேரும், 460 மதிப்பெண்களுக்கு மேல் 43 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 47 பேரும், 400க்கு மேல் 74 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா் .
தமிழ்ப் பாடத்தில் 2 மாணவா்கள் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 10 மாணவா்களும், கணிதத்தில் 17 மாணவா்களும், அறிவியலில் 23 மாணவா்களும் , சமூக அறிவியலில் 3 மாணவா்களும் 99 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா் ஆடிட்டா் கிருத்திகன் லோகேஷ், செயலாளா் தங்கராஜ், பொருளாளா் தியாகராஜன், உபதலைவா் சுப்பிரமணியன், இணைச் செயலாளா் நடராஜன், பேருந்து இயக்குநா் செந்தில்குமாா், இயக்குநா்கள், பள்ளியின் முதல்வா், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பணியாளா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.