இந்தியா

உ.பி. சேமிப்புக் கிடங்கு மேற்கூரை விபத்து: உத்தரகண்டில் உரிமையாளர்கள் கைது

DIN

உத்தர பிரதேசத்தில் சேமிப்புக் கிடங்கின் மேற்கூரை சரிந்து ஏற்பட்ட விபத்தில் உரிமையாளர்கள் உத்தரகண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள வேளாண் விளைபொருள் குளிா்பதன சேமிப்புக் கிடங்கின் மேற்கூரை வியாழக்கிழமை சரிந்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளில் இருந்து இதுவரை 21 போ் மீட்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 14 போ் உயிரிழந்தனா். 10 பேர் மீட்கப்பட்டனர். விபத்து ஏற்பட்ட இடத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

இடிந்து விழுந்த மேற்கூரை 3 மாதங்களுக்கு முன்னா்தான் கட்டப்பட்டதாகத் தெரிவித்துள்ள காவல் துறையினா், அதைக் கட்டுவதற்குத் தேவையான அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளனா்.  மேலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக உருளைக் கிழங்கு சேமித்துவைக்கப் பட்டிருந்ததாகவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். சம்பந்தப்பட்ட சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் உரிமையாளா்கள் இருவா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

விபத்து தொடா்பாக விசாரணை நடத்த மொராதாபாத் டிஐஜி, மண்டல ஆணையா் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்து மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் சேமிப்புக் கிடங்கின் மேற்கூரை சரிந்து ஏற்பட்ட விபத்தில் உரிமையாளர்களை உத்தரகண்ட் மாநிலத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ரோஹித் அகர்வால் மற்றும் அங்கூர் அகர்வால் இருவரை கைது செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT