இந்தியா

வெங்காய விலை தொடர்பாக நடத்தப்பட்ட விவசாயிகள் பேரணி நிறுத்தம்!

DIN

வெங்காய விலை தொடர்பாக நாசிக்கில் இருந்து மும்பையை நோக்கி விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற விவசாயிகள் பேரணி நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் ஷாபூர் பகுதியில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பினை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் அறிவித்தனர். விவசாய சங்கத்தின் இந்த முடிவினால் பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். 
 

இது தொடர்பாக விவசாயிகள் சங்கத் தலைவர் ஜே.பி.கவித் கவித் கூறியதாவது: அரசு எங்களது கோரிக்கைகளை சட்டப்பேரவையில் பேசுவதாக உறுதியளித்துள்ளதால் இந்தப் பேரணியை நிறுத்துவதாக முடிவெடுத்துள்ளோம். அரசு எடுக்கும் முடிவுகள் கிராமங்கள் மற்றும் தாலூக்காக்களில் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக 17 அம்சங்கள் கொண்ட கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியிலிருந்து மும்பை நோக்கிப் பேரணியாக புறப்பட்டனர். விவசாயிகள் வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பது, வேளாண் சார்ந்த பொருள்களுக்கு உரிய விலையினைக் கொடுப்பது, விவசாயிகளுக்கு மின்சாரக் கட்டணத்தில் இருந்து விலக்களிப்பது, பருவம் தவறி பெய்யும் மழையால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பேரணியாக சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

அவசர காலத்தில் விமானங்களை நெடுஞ்சாலைகளில் தரையிறக்கும் வசதி!

யூதர்கள் இஸ்ரேலை வெறுக்கிறார்கள்: டிரம்ப்பின் அதிர்ச்சி கருத்து!

நீங்க ரெடியா? இங்கே கேட்பவர் தமன்னா!

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

புறநானூறு தாமதமாகும்: சூர்யா

SCROLL FOR NEXT