இந்தியா

நிலத்தைக் கொடுத்து வேலை பெற்ற 4,000 பேர்? விசாரணையில் திடுக்கிடும் தகவல்

DIN


ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற விவகாரம் தொடர்பான, முதற்கட்ட விசாரணையில் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த போது சுமார் 4,000 பேர் நிலத்தைக் கொடுத்து ரயில்வே வேலை வாங்கியிருப்பதற்கான முகாந்திரங்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, கிட்டத்தட்ட 2000 பேரின் பெயர்களும் அவர்களது விண்ணப்பங்கள் எந்த ரயில்வே மண்டலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்ற பட்டியலும் சேமிக்கப்பட்ட கருவி கிடைத்திருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தங்களது நிலங்களைக் கொடுத்துவிட்டு ரயில்வே வேலை வாங்கியவர்கள் அனைவருமே பிகாரின் 5 - 6 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2009 வரையில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது, இந்திய ரயில்வேயின் ஆள்தோ்வு நடைமுறைகளுக்கு மாறாக, பணி நியமனங்கள் நடைபெற்றன. இதற்கு லஞ்சமாக பணி நியமனம் பெற்றவா்களுக்குச் சொந்தமான நிலங்கள் பெறப்பட்டதாக லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினா் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் லாலு பிரசாத் யாதவின் மகனும் பிகாா் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நேரில் ஆஜராகும்படி சிபிஐ தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT