இந்தியா

உயிருடன் இருக்கும் மகளை இறந்ததாக அறிவித்த தந்தை! காரணம்?

28th Jun 2023 07:18 PM

ADVERTISEMENT

 

மத்தியப் பிரதேசத்தில் மதமாற்றத் திருமணம் செய்துகொண்ட மகளை வெள்ளைத்துணி போர்த்தி இறந்துவிட்டதாக தந்தை ஒருவர் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் மன்சாவூர் பகுதியிலுள்ள தந்தை, தனது மகள் காணவில்லை என நகர்காரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகளை உயிருடன் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். 

காவல் துறையினர் ஒன்றரை ஆண்டுகாலத் தொடர் விசாரணைக்குப் பிறகு மகளைக் கண்டறிந்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரின் தந்தைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

அந்த இளம்பெண், ஷாகில் என்ற இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டுள்ளார். வீட்டை விட்டு விருப்பப்பட்டே வெளியேறியதாகவும், கணவருடனே வாழ விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் விருப்பப்பட்டே இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த தந்தை, ஊடகத்தை வரவழைத்து தனது மகள் இறந்துவிட்டதாக அறிவித்து அவர் மீது வெள்ளைத் துணியை போர்த்திவிட்டுச் சென்றுள்ளார். 

இஸ்லாம் ஆணை திருமணம் செய்துகொண்டதால் ஹிந்து மதத்தை இழிவு படுத்திவிட்டதாகவும், இதனால் தனக்கு மகளே தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடியோ தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT