இந்தியா

ஜூன் 20ல் கலைஞர் கோட்டத்தை திறக்கிறார் பிகார் முதல்வர் 

18th Jun 2023 06:18 PM

ADVERTISEMENT

திருவாரூரில் ஜூன் 20ஆம் தேதி கலைஞர் கோட்டத்தை பிகார் முதல்வர் நிதீஷ்குமார் திறந்துவைக்கிறார். 

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருவாரூா் மாவட்டம் காட்டூரில் ‘கலைஞா் கோட்டம்’, முத்துவேலா் நூலகம் திறப்பு விழா ஜூன் 20-ஆம் தேதி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

விழாவில் பிகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார். அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தைத் திறந்து வைக்கிறார். கருணாநிதி திருவுருவச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்த நிலையில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு திமுகவினர் திரண்டு வருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 7,000 சதுர அடியில், ரூ.12 கோடி மதிப்பில் திருவாரூரில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT