இந்தியா

மது குடிக்கிறேனா?: பஞ்சாப் முதல்வர் விளக்கம்

18th Jun 2023 09:20 PM

ADVERTISEMENT

கடந்த 12 ஆண்டுகளாக இரவும் பகலும் குடித்துக்கொண்டிருந்தால் ஒருவர் உயிருடன் இருக்க முடியுமா? என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விளக்கமளித்துள்ளார். 

கடந்த 12 ஆண்டுகளாக இரவும், பகலும் மது அருந்துவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீது குற்றாச்சாட்டு ஒன்று உள்ளது. இந்த நிலையில் தொலைக்காட்சியின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் குடிப்பழக்கம் பற்றிய குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக இரவும் பகலும் குடித்துக்கொண்டிருந்தால் ஒருவர் உயிருடன் இருக்க முடியுமா? அப்படியென்றால் என் கல்லீரன் என்ன இரும்பினால் ஆனதா?. 

எதிர்க்கட்சியினர் தன்மீது குறைகூற எதுவும் இல்லாததால்தான், இதுபோன்ற குற்றச்சாட்டை அவர்கள் கூறுகிறார்கள். கடந்த 70 ஆண்டுகளில் நடக்காத பல வேலைகளை கடந்த 1.5 ஆண்டுகளில் நான் முடித்துவிட்டேன். முன்னதாக ஜனவரி 2019 இல், பேரணியில் ஒன்றில் பகவந்த் மான், தனது தாய் மற்றும் ஆம் ஆத்மி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் குடிப்பழக்கத்தை கைவிடுவதாக உறுதி எடுத்தார். 

இருப்பினும், கடந்த ஆண்டு பகவந்த் மான் ஜெர்மனியில் குடிபோதையில் இருந்ததால், அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். ஆனால் அந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி அப்போது மறுத்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

Tags : Bhagwant Mann
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT