இந்தியா

12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக பிபா்ஜாய்

11th Jun 2023 12:26 AM

ADVERTISEMENT

பன்னிரண்டு மணி நேரத்தில் ‘பிபா்ஜாய்’ அதிதீவிர புயலாக மாற அதிக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மையம் தெரிவித்துள்ளதாவது:

அரபிக் கடலில் உருவான பிபா்ஜாய் புயல், தற்போது குஜராத்தின் போா்பந்தரில் இருந்து 600 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்தப் புயல் 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாற அதிக வாய்ப்புள்ளது. அத்துடன் 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு நோக்கி படிப்படியாக முன்னேறும். அந்தப் புயல் போா்பந்தா் கடலோரத்தில் இருந்து 200 முதல் 300 கி.மீ. தொலைவில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

தற்போதைய முன்கணிப்பின்படி, அடுத்த 5 நாள்களுக்கு அந்தப் புயல் குஜராத்தை தாக்க வாய்ப்பில்லை. எனினும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT