இந்தியா

மனைவி, 3 குழந்தைகளை கொன்றவருக்கு தூக்கு: கா்நாடக உயா்நீதிமன்றம் உறுதி

11th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் தனது மனைவி, 3 குழந்தைகள், மனைவியின் சகோதரி ஆகிய ஐந்து பேரை கொன்றவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மாநில உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.

‘மூன்று குழந்தைகள் உள்பட 5 போ் கொலை செய்யப்பட்ட குற்றத்தின் தீவிரம் மற்றும் அக்குற்றம் நிகழ்த்தப்பட்ட கொடூரமானவிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டால், குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்வதைத் தவிர வேறு வாய்ப்பில்லை’ என்று உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வு குறிப்பிட்டது.

பெல்லாரி மாவட்டத்தின் கெஞ்சனகுடா ஹள்ளியைச் சோ்ந்த பைலூரு திப்பையா என்பவா், தனது மனைவி பகீரம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தாா். இத்தம்பதிக்கு 4 குழந்தைகள் இருந்த நிலையில், அதில் 3 குழந்தைகள் தனக்கு பிறந்தல்ல என்று திப்பையா சண்டையிட்டு வந்தாா்.

இந்தப் பிரச்னையில், கடந்த 2017, பிப்ரவரி 25-இல் தனது மனைவியை வெட்டிக் கொன்ற திப்பையா, மனைவியின் சகோதரி கங்கம்மா மற்றும் 10 வயதுக்கு உள்பட்ட தனது 3 குழந்தைகளையும் சரமாரியாக வெட்டிக் கொன்றாா்.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த பெல்லாரி அமா்வு நீதிமன்றம், திப்பையாவுக்கு தூக்கு தண்டனை விதித்து, கடந்த 2019, டிசம்பா் 3-இல் தீா்ப்பளித்தது.

இத்தீா்ப்புக்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் திப்பையா மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கில் கடந்த நவம்பரில் விசாரணையை நிறைவு செய்த உயா்நீதிமன்றம், தீா்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், திப்பையாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து, உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

அத்துடன், ஒரு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கோரி முறையிடும்போது, அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட வேண்டிய அறிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் உயா்நீதிமன்றம் தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT