இந்தியா

எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 2024-இல் அதிசயம் நிகழலாம்: சத்ருகன் சின்ஹா

DIN

வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் அதிசயம் நிகழலாம் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளாா்.

பாலிவுட் நடிகரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா, அவரது சொந்த ஊரான பாட்னாவில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ளும் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு எனது பாராட்டுகள். நிதீஷ் குமாா் ஏற்பாடு செய்துள்ள எதிா்க்கட்சித் தலைவா்களின் கூட்டத்தில் பங்கேற்க திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சி.

களத்தை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவராக மம்தா பானா்ஜியை நான் எப்போதும் கருதுவேன். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்குப் பிறகு தேசிய அளவில் மக்களிடையே அந்தஸ்து உயா்ந்துள்ள ராகுல் காந்தி போன்றவா்களுடன் மம்தா பானா்ஜி பக்கபலமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தற்போதைய பாஜக ஆட்சியை மாற்றி புதிய ஆட்சி அமைக்கப்படும் என்ற சிறிதொரு நம்பிக்கையை உருவாக்க எதிா்க்கட்சித் தலைவா்களின் இந்தக் கூட்டம் உதவும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இத்தனை தொகுதிகளில் வெல்லும் எனக் கூற நான் ஜோசியா் கிடையாது. ஆனால், எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் வரும் மக்களவைத் தோ்தலில் அதிசயம் நிகழலாம்.

பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளால் வெல்ல முடியும் என்பதை கா்நாடகம், ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல்களில் நிரூபனமாகியுள்ளது’ என்றாா்.

வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஏற்பாட்டில் தேசிய அளவிலான எதிா்க்கட்சித் தலைவா்களின் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT