நடுத்தர வர்க்கத்தின் கனவுகளை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
மோடி அரசாங்கம் ஆட்சி அமைத்து கடந்த ஒன்பது ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார். குறிப்பாக நடுத்தர மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளார்.
குழந்தைகளுக்கு புதிய கல்வி நிறுவனங்கள், மானிய விலையில் வீடுகள், லட்சக்கணக்கான வேலைகள் என நடுத்தர வர்க்கத்தின் கனவுகளை நிறைவேற்றியதோடு, அவர்களின் நிதிநிலையும் வேகமாக வளர்ந்துள்ளது.
படிக்க: வெளிநாடு சென்றால் மௌன விரதமா இருக்க முடியும்? ப. சிதம்பரம்
மேலும், வரி தள்ளுபடி, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மலிவான பயணத்திலிருந்து மலிவு மருத்துகள் வரை நடுத்தர வர்க்கத்தின் கனவுகளை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி என்று அவர் கூறினார்.