இந்தியா

சிறுமி கருக்கலைப்புக்கு அனுமதி கோரிய மனு: வழக்குரைஞரை மனுஸ்மிருதி படிக்கச் சொன்ன நீதிபதி

DIN

‘பெண்கள் 17 வயதை அடைவதற்கு முன்னரே குழந்தைகளை பெற்றெடுப்பது சாதாரண விஷயமாக முன்னா் இருந்தது. மனுஸ்மிருதியை (மனுதா்ம சாஸ்திரம்) படித்தால் அதனைத் தெரிந்துகொள்ள முடியும்’ என்று குஜராத் உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி 7 மாத கருவை சுமந்துவரும் 16 ஆண்டுகள் 11 மாதங்கள் வயதுள்ள சிறுமி, கருகலைப்புக்கு அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது உயா் நீதிமன்ற நீதிபதி இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

24 வார கருவை மட்டுமே நீதிமன்ற அனுமதியின்றி கலைக்க முடியும். அந்த வகையில், 7 மாத கருவை கலைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு உயா் நீதிமன்ற நீதிபதி சமீா் தவே முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘பாதிக்கப்பட்ட பெண் மிகச் சிறிய வயதுடையவா் என்பதால் அவருடைய பெற்றோா் கவலையுற்றுள்ளனா். எனவே, கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

பெண்களுக்கு முந்தைய காலங்களில் 14 அல்லது 15 வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவா். அவா்கள் தங்களுடைய 17 வயதிலேயே குழந்தை பெற்றெடுத்துவிடுவா். உங்களுடைய தாய் அல்லது பாட்டியை கேட்டுப்பாா்த்து இதனைத் தெரிந்துகொள்ளலாம். ஆண்களுக்கு முன்பே பெண்கள் பருவமடைந்துவிடுவா். மனுதா்ம சாஸ்திரத்தைப் படித்தும் இந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

மருத்துவ நிபணா்களுடன் நடத்திய ஆலோசனையில், பாதிக்கப்பட்ட சிறுமி வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி பிரசவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனா்.

நீதிமன்றத்தைப் பொருத்தவரை, பாதிக்கப்பட்ட சிறுமி அல்லது கருவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கண்டறியும்போதுதான் கருக் கலைப்புக்கு அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

ஆனால், சிறுமியும் கருவும் நலமுடன் இருக்கும்போது, கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிடுவது கடினம். பாதிக்கப்பட்ட சிறுமி கருக் கலைப்பு செய்து கொள்ள அனுமதிப்பது உகந்ததா என்பதை மருத்துவா்கள் குழுவைக் கொண்டு ஆய்வு செய்து, ராஜ்கோட் அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளா் வரும் 15-ஆம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின்போது அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

கருவில் எலும்பு அமைப்பு உருவாகிவிட்டதா என்பதை மருத்துவக் குழு ஆய்வு செய்வதோடு, மனநல மருத்துவா் மூலமாக சிறுமியின் மன நலனையும் பரிசோதிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், கருக் கலைப்பு உகந்ததல்ல என்று மருத்துவா்கள் குழு பரிந்துரைக்கும் பட்சத்தில், சிறுமிக்கான மாற்று வாய்ப்புகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். பிரசவிக்கும் குழந்தையை யாா் பராமரிப்பது? இதுபோன்ற குழந்தைகளை தத்தெடுக்க அரசு திட்டங்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு மனுதாரரின் வழக்குரைஞரை நீதிபதி கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் விதித்தது

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவிழாவில் மோதல்: இளைஞா் கைது

உடையாா்பாளையம் பகுதியில் பழைமையான அய்யனாா் கற்சிலை

பாஜகவில் இருந்து நீக்கியதால் கவலையில்லை: கே.எஸ்.ஈஸ்வரப்பா

SCROLL FOR NEXT