இந்தியா

பாலசோரில் மீண்டும் ரயில் விபத்து!

10th Jun 2023 12:14 PM

ADVERTISEMENT

 

ஒடிசா மாநிலத்திலுள்ள பாலசோர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து நேரிட்டது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்திலுள்ள ருப்சா ரயில்நிலையத்தில் கடந்த மூன்று நாள்களாக சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. நிலக்கரி இருந்த அந்த ரயிலில் இன்று காலை தீப்பற்றி புகை எழுந்தது. 

இது தொடர்பாக உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  

ADVERTISEMENT

கடந்த 2ஆம் தேதி பாலசோர் மாவட்டத்திலுள்ள பாஹநாகா பஜார் ரயில் நிலையம் அருகே மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதே பாலசோர் அருகே சரக்கு ரயிலில் தீப்பற்றியதால் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT