இந்தியா

மணிப்பூர் கலவரம்: 2 மாநில முதல்வர்கள் ஆலோசனை

10th Jun 2023 11:39 AM

ADVERTISEMENT

 

மணிப்பூர் கலவரம் தொடர்பாக அசாம், மணிப்பூர் மாநில முதல்வர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கை சந்தித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்

கலவரம் தொடர்பான வழக்கை சிபிஐயும் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரிக்கும் நிலையில் சந்திப்பு

ADVERTISEMENT

பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மைத்தேயி மற்றும் குகி-நாகா இன மக்களிடையே கலவரம் ஏற்பட்டுள்ளது. 

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். 

இந்தக் கோரிக்கையை, குகி மற்றும் நாகா பழங்குடியினா் எதிா்க்கின்றனா்.

இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதில் 80 போ் வரை உயிரிழந்தனா். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

வன்முறையாளர்கள் தொடர்ந்த மோதலில் ஈடுபட்டு வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT