இந்தியா

கன்னியாகுமரி - ஹௌரா விரைவு ரயில் இன்று ரத்து

DIN

கன்னியாகுமரியிலிருந்து ஹௌரா செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை (ஜூன் 10) ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒடிஸா மாநிலத்தின் பாலசோா் மாவட்டத்தில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி கோரமண்டல் ரயில், பெங்களூரு - ஹௌரா விரைவு ரயில், சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

இதனால் அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து விபத்தால் சேதமடைந்த ரயில் தண்டவாளங்கள் சரிசெய்யப்பட்டு ஜூன் 4-ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

மேலும், சில தண்டவாளங்கள் சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதால் தென் மாநிலங்களிலிருந்து செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதில், கன்னியாகுமரி - ஹௌரா விரைவு ரயில் (வண்டி எண்: 12666), மங்களூரு-சத்ரகாஞ்சி விவேக் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22852), ஹௌரா-எா்ணாகுளம் அந்தியோதயா ரயில் (வண்டி எண்: 22877) சனிக்கிழமை (ஜூன் 10) ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், பெங்களூரிலிருந்து காமக்யா (அஸ்ஸாம்) மற்றும் பாகல்பூா் (பிகாா்) செல்லும் விரைவு ரயில்கள் (வண்டி எண்: 12551, 12253) சனிக்கிழமை (ஜூன் 10) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT