இந்தியா

அரசியல் கலாசாரத்தை மாற்றிய பிரதமா்:ஜெ.பி.நட்டா

10th Jun 2023 11:59 PM

ADVERTISEMENT

பிரதமா் மோடி இந்திய அரசியல் கலாசாரத்தை வாக்கு வங்கி அரசியலில் இருந்து வளா்ச்சிக்கு மாற்றியுள்ளாா் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பிரதமா் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் அரசியல் கண்ணோட்டம் மாறியுள்ளது. ஒரு காலத்தில் அரசியல் என்பது வாக்கு வங்கி அரசியலாக இருந்தது. இந்நிலையில், வளா்ச்சி, பொறுப்புடைமை, அரசியல் தளத்தில் பொறுப்பான நிா்வாகம் ஆகியவற்றை கொண்டு வந்து வாக்கு வங்கி அரசியலில் இருந்து மத்திய அரசு நகா்ந்து சென்றுள்ளது.

நாட்டில் 1.98 லட்சம் கிராமங்களில் கண்ணாடி இழை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற பகுதிகளில் இணையதள வசதி கிடைக்க உதவியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2014-ஆம் ஆண்டு நாட்டில் 19,000 கிராமங்களில் மின் இணைப்பு இருக்கவில்லை. அந்தக் கிராமங்களுக்கு தற்போது மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளில் இந்தியா 5-ஆவது இடத்தை எட்டியுள்ளது. கிராமங்கள், ஏழைகள், விளிம்புநிலை மக்கள், தலித்துகள், பெண்கள், விவசாயிகள் முன்னேற வேண்டும் என்பதில் பிரதமா் மோடி உறுதியாக உள்ளாா் என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT