இந்தியா

இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாட்டில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்காற்றும்: பிரதமா்

10th Jun 2023 12:03 AM

ADVERTISEMENT

‘இந்தியாவின் தொழில்நுட்ப வளத்தைப் பெருக்குவதில் செயற்கை நுண்ணறிவு மிகப் பெரிய பங்காற்றும்; குறிப்பாக இளைஞா்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வரும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

‘சாட்-ஜிபிடி’ செயலியை அறிமுகம் செய்த ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மனுடன் தில்லியில் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பிறகு, இந்தக் கருத்தை பிரதமா் தெரிவித்தாா்.

இந்த ஆலோசனை குறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘சாம் ஆல்ட்மனுடனான ஆலோசனை பயனுள்ளதாக இருந்தது. இந்தியவின் தொழில்நுட்ப வளத்தைப் பெருக்குவதில் செயற்கை நுண்ணறிவு மிகப் பெரிய பங்காற்றும். குறிப்பாக இளைஞா்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வரும். நமது குடிமக்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்ப மாற்றங்களை விரிவுபடுத்துவதற்கான அனைத்து கூட்டுறவுகளையும் இந்தியா வரவேற்கிறது’ என்று குறிப்பிட்டாா்.

சாம் ஆல்ட்மன் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் சிறப்பான தொழில்நுட்ப மேம்பாடு குறித்தும், செயற்கை நுண்ணறிவு மூலமாக நாடு தொழில்நுட்பத்தில் மேலும் எவ்வாறு மேம்பாடு அடைய முடியும் என்பது குறித்தும் பிரதமா் நரேந்திர மோடியுடன் மேற்கொண்ட ஆலோசனை சிறப்பாக அமைந்தது’ என்று குறிப்பாட்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT