இந்தியா

பிரதமா் மோடியுடன் சாட்ஜிபிடி சிஇஓ சந்திப்பு

DIN

சாட்ஜிபிடி மென்பொருளை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் பிரதமா் மோடியை வியாழக்கிழமை தில்லியில் சந்தித்து பேசினாா். அப்போது, இந்தியாவில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும், அதை வரைமுறைப்படுத்துவது குறித்தும் ஆலோசித்ததாக சாம் ஆல்ட்மன் தெரிவித்தாா்.

மேலும், சில இந்திய ஸ்டாா்ட்அப் நிறுவனங்களிடம் ஆலோசித்துள்ளதாகவும், அவற்றில் முதலீடு செய்ய உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

தில்லி இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சாம் ஆல்ட்மன் அளித்த பதில், ‘சாட்ஜிபிடி பாதுகாப்பானதுதான் என்பதை உறுதி செய்ய 8 மாதங்கள் ஆய்வு செய்தேன். சாட்ஜிபிடியால் அனைத்து விதமான கட்டுப்பாடும் தொழில்நுட்பத்தின் கையில் சென்றுவிடும் என்பதை நான் நம்பவில்லை.

ஏஐ நிறுவனங்கள் சுயவரைமுறைப்படுத்தல் என்பது முக்கியம். ஆனால், அதிநவீன செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பத்தின் மகத்தான ஆற்றலைக் கருத்தில் கொண்டு பாா்க்கும்போது, உலகம் சில நிறுவனங்களின் கைகளுக்குள் சென்றுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோஷம் எழுந்து வருகிறது. முழு இந்த தொழில்நுட்பமானது மனித குலத்துக்கே முடிவு கட்டிவிடும் என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளாா்’ என்றாா்.

இணையவழித் தேடுதலை விட்டுவிட்டு சாட்ஜிபிடியிடம் கேள்வி எழுப்பி ஒருங்கிணைந்த தகவல்களைப் பெறும் முறையைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனா்.

கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்ப மேம்பாடு, மென்பொருள் உருவாக்கம் ஆகியவை குறித்த அனைத்து விவரங்களை அறியவும் சாட்ஜிபிடி பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

SCROLL FOR NEXT