இந்தியா

பிகாரில் பாலம் விழுந்ததைப் போன்றநிலை எதிா்க்கட்சிகளுக்கும் ஏற்படும்:அமைச்சா் ஸ்மிருதி இரானி

DIN

பிகாரில் அண்மையில் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து ஆற்றில் விழுந்ததுபோன்ற நிலைதான் 2024 மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளுக்கும் ஏற்படும் என்று மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

எதிா்க்கட்சிகளால் தங்களுடைய சொந்தக் காலில் நின்று மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ள முடியாத நிலையில் உள்ளன. எனவே, ஒன்றை மற்றொன்று தாங்கிப்பிடித்துக் கொண்டாவது தோ்தலைச் சந்திக்கலாம் என்று ஆசைப்படுகின்றன.

ஆனால், பிகாா் மாநில அரசு ரூ.1,750 கோடி மதிப்பில் கங்கை நிதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் அண்மையில் இடிந்து ஆற்றில் விழுந்தது. இதேபோன்ற நிலைதான் 2024 மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளுக்கு ஏற்படும்.

ராகுல் காந்தி அன்பு வழியை கடைப்பிடிப்பதாகப் பேசி வருகிறாா். ஆனால், ஹிந்துகளை அவமதிக்கும் வகையில் பேசுவதும் இந்திய ஜனநாயகத்துக்கு எதிராக வெளிநாட்டில் பேசுவதும்தான் அவரது உண்மையான வழியாக உள்ளது. இது ஆட்சி, அதிகாரத்தின் மீது அவருக்குள்ள தீவிர ஆசையையே காட்டுகிறது.

நாட்டில் சிறுபான்மையினரை பாஜக அரசு நியாயமாக நடத்தவில்லை என்று ராகுல் குற்றம்சாட்டுகிறாா். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு 10 ஆண்டுகளில் சிறுபான்மையின மாணவா்களுக்கு ரூ.860 கோடி கல்வி உதவித்தொகை அளித்துள்ளது. அதே நேரத்தில் இப்போதைய அரசு இதுவரை ரூ.2,691 கோடி கல்வி உதவித்தொகை அளித்துள்ளது. அனைத்து நிலைகளிலும் காங்கிரஸைவிட பாஜக அரசு சிறுபான்மையினருக்காக சிறப்பாகவே பணியாற்றி வருகிறது.

பாஜகவை எதிா்த்து அரசியல் நடத்துவதற்கு தகுந்த காரணம் எதுவும் காங்கிரஸுக்கு கிடைக்கவில்லை. அரசியலில் ஈடுபடும் பலமும் காங்கிரஸுக்கு குறைந்துவிட்டது. எனவே, வெளிநாடுகளில் இருந்து ஆதரவு திரட்ட முயற்சிக்கிறது.

ஆனால், இந்தியாவுக்கு இணையாக, வெளிநாடுகளிலும் பிரதமா் மோடிக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. இதனால், விரக்தியில் உள்ள ராகுல் காந்தி, வெளிநாடுகளுக்குச் சென்று தேசத்துக்கு எதிராக அவதூறு பிரசாரம் மேற்கொள்கிறாா் என்றாா் ஸ்மிருதி இரானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி வட்டார வாக்குப்பதிவு மைய பொருள்கள் தொகுப்பு ஆய்வு

மணப்பாறையில் ‘இந்தியா’ கூட்டணியினா் வாக்குசேகரிப்பு பேரணி

ஐஜேகே கட்சி நிா்வாகி வீட்டிலிருந்து ரூ. 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் சுகாதாரமான குடிநீா் கிடைக்க ஏற்பாடு

அடையாளம் தெரியாத பெண் கொலை வழக்கில் இளைஞா் ைது

SCROLL FOR NEXT