கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 9 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்தாண்டு ஒரு வாரம் தாமதமாக நேற்று தொடங்கியுள்ளது. அந்தமான் பகுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.
இந்த மழை மன்னார் வளைகுடா முதல் தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
படிக்க: பிளஸ் 2 துணைத்தேர்வு: ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட்!
இந்நிலையில் கேரளத்தின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஜூன் 12-ம் தேதிதி வரை மிகக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்பான அளவுக்கு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.