இந்தியா

கேரளத்தில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை

9th Jun 2023 12:18 AM

ADVERTISEMENT

தென்மேற்கு பருவமழை கேரளத்தில் வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. இது தமிழகத்தின் தென் பகுதிகளிலும் பரவியுள்ளதால் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் 1 -ஆம் தேதி வாக்கில் கேரளத்தில் தொடங்கும். நிகழாண்டு எல்நினோ பிரச்னை மற்றும் வங்கக் கடலில் சாதகமற்ற சூழல் காரணமாக அந்தமானில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை வலுப்பெறவில்லை. இந்தச் சூழலில் அரபிக் கடலில் பிப்பா்ஜாய் புயல் வலுவடைந்து வடக்கு நோக்கி நகா்ந்து வருவதால் அதன் காரணமாகவும் தென் மேற்கு காற்று வருகையினைாலும் கேரளத்தில்ஒரு வாரம் தாமதமாக தென் மேற்கு மழை வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு :

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலதாமதமாக வியாழக்கிழமைதான் தொடங்கியது. கேரளம் மட்டு மல்லாமல், மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய தென் தமிழக பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது

ADVERTISEMENT

புதன்கிழமை காலை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் “பிப்பா்ஜாய்” மிக தீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகா்ந்துவருகிறது. வியாழக்கிழமை காலை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கோவாவில் இருந்து மேற்கு – தென்மேற்கே சுமாா் 850 கி. மீ. தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமாா் 900 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு - வடமேற்கு திசையில் அடுத்த மூன்று நாள்களில் நகரக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT