இந்தியா

தில்லியை பின்னுக்குத் தள்ளிய நியூ யார்க்: அபாய நிலையில் காற்றுமாசு

DIN


கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக, நியூ யார்க் நகரமே, அடர் மஞ்சள் நிற புகையால் சூழ்ந்து, மக்கள் மூச்சு விடவே சிரமப்படும் நிலை ஏற்பட்டது.

வட அமெரிக்க நகரமான நியூ யார்க் நகரில் திடீரென புகை மண்டலம் ஏற்பட்டு, நகரமே மஞ்சளாக மாறியதால், நகர மக்கள் கடும் அச்சமடைந்தனர். மூச்சு விட சிரமப்பட்டனர். இந்த நிலையில் தான் கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீதான் இந்த புகை மண்டலத்துக்குக் காரணம் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியிருந்தது.

செவ்வாய்க்கிழமை இரவு முதல் புகை மண்டலத்தால், நியூ யார்க்கின் காற்று மாசு அளவு அபாயகரமான அளவை எட்டியிருக்கிறது. இதனால், உலகளவில், காற்றின் தரம் மிக மோசமாக இருக்கும் நகரங்களின் பட்டியலில் புது தில்லி மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி நியூ யார்க் நகரம் முன்னிலையைப் பிடித்துள்ளது. ஒருகட்டத்தில் நியூ யார்க் நகரின் காற்று மாசு அளவு 218 புள்ளிகள் என்ற அளவைத் தொட்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவே புதன்கிழமையும் நீடித்தது. 

நியூ யார்க்கில் வசிப்பவர்களுக்கு இதய மற்றும் மூச்சு விடுவதில் பிரச்னை இருந்தால், வெளியே செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வயதானவர்களும் குழந்தைகளும் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வெளியே செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் நியூ யார்க் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

புகை மண்டலம் திடிரென நியூ யார்க் நகரைச் சூழ்ந்துகொண்டு, ஒட்டுமாத்தமாக மஞ்சள் நிறத்தில் மாற்றும் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு நோக்கி வீசும் காற்றால், புதன்கிழமையும் புகை மண்டலம் நியூ யார்க் நோக்கி தள்ளப்பட்டதால், நிலைமை மேலும் மோசமடைந்தது. இந்த நிலைமை வியாழக்கிழமை முதல் சரியாகத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT