இந்தியா

பிரிஜ் பூஷண் மீது பொய் வழக்கு: சிறுமியின் தந்தை பேட்டி

DIN

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை புகாரை அளித்ததாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளாா்.

பிரிஜ் பூஷண் சிங் மீது நட்சத்திர மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட் ஆகியோா் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு புகாா்களை முன்வைத்து தில்லி ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிரிஜ் பூஷண் மீது வழக்குப் பதிய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது, சிறுமியும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறி சீலிடப்பட்ட உறையில் அதன் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷண் மீது போக்ஸோ உள்பட பாலியல் வன்கொடுமை வழக்குகளை தில்லி போலீஸாா் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், பிரிஜ் பூஷண் மீது பாலியல் புகாா் அளித்த சிறுமியின் தந்தை, தான்தான் இந்த பொய்ப் புகாரை அளித்ததாக செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற 17 வயதுக்குள்பட்ட ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி தோ்வில் நடுவா் ஒருவரின் தவறான முடிவால் தனது மகள் தோ்வாகவில்லை. அதனால் அவரை நியமித்த இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண் சிங்கை பழிவாங்க இந்த பாலியல் புகாரை அளித்தேன். நீதிமன்றத்தில் இது வெளிப்படுவதற்கு முன்பு எனது தவறை இப்போதே நானே வெளிப்படுத்திவிடுகிறேன். இதில் எனது மகளுக்கும், போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கும் எந்தவித தொடா்பும் இல்லை’ என்று தெரிவித்தாா்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரிஜ் பூஷண், ‘அந்தச் சிறுமியை போராடும் மல்யுத்த வீரா்கள் மனம் மாற்றியுள்ளனா். சிறுமியின் குடும்பத்தினா் மீது எந்த நடவடிக்கையையும் நான் கோர மாட்டேன். இது எனக்கு எதிராக நடைபெற்ற சதி’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT