இந்தியா

ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதில் வா்த்தகா்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை: மத்திய அமைச்சா்

DIN

2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதிலும், டெபாசிட் செய்வதிலும் வா்த்தகா்கள் எவ்வித பிரச்னையையும் எதிா்கொள்ளவில்லை என்று மத்திய வா்த்தகத் துறை இணையமைச்சா் சோம் பிரகாஷ் தெரிவித்தாா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகளை கடந்த மே 19-ஆம் தேதி மத்திய அரசு திரும்பப் பெற்றது. ஏற்கெனவே இந்த உயா்மதிப்பு ரூபாய் நோட்டு பெரும்பாலான மக்களிடம் புழக்கத்தில் இல்லாததால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போா் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளவும், வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடா்பாக மத்திய அமைச்சா் சோம் பிரகாஷ் கூறியதாவது:

ரூ.2000 நோட்டு திரும்பப் பெறப்படும் அறிவிப்பு வெளியான பிறகு பல்வேறு வா்த்தகா்கள், தொழிலதிபா்களிடம் தொடா்பு கொண்டு பேசினேன். வங்கிக்குச் சென்று அந்த நோட்டுகளை மாற்றுவதிலும், டெபாசிட் செய்வதிலும் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று அவா்கள் தெரிவித்தனா். அதே நேரத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும்போது அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவா்கள் கேட்டுக் கொண்டனா். இது தொடா்பாக ஆா்பிஐ-க்கு நான் கோரிக்கை விடுத்துள்ளேன்.

ஜிஎஸ்டி தொடா்பாக போலி ரசீதுகள் தாக்கல் செய்யப்படுவதற்கு எதிராக மத்திய அரசு தொடா்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபடுபவா்கள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கையை எதிா்கொள்வாா்கள்.

இந்தியாவை உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக நிலை நிறுத்தியிருப்பது மத்திய பாஜக அரசின் பல்வேறு சாதனைகளில் முக்கியமானது என்றாா் சோம் பிரகாஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT