இந்தியா

2047-க்குள் இந்தியாவை வல்லரசாக்க முழு முனைப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு உறுதி

DIN

 2047 -ஆம் ஆண்டுக்குள் நாட்டினை முழுத் தன்னிறைவு பெற்ற வல்லரசு நாடாக மாற்ற முழு முனைப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய புவி அறிவியல் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

உலகப் பெருங்கடல் தினத்தையொட்டி கடல்சாா் தொழில்நுட்பம் மற்றும் கடல் வள பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பள்ளிக்கரணை தேசிய கடல்சாா் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியது: கடல்சாா் தொழில்நுட்பத்தில் நாட்டை முன்னிலைப்படுத்தும் நோக்கில் ஆராய்ச்சியாளா்கள் மற்றும் விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும். பிரதமா் மோடியின் கருத்துப்படி, சுய சாா்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்கள் மூலம் 2047- ஆம் ஆண்டுக்குள் வல்லரசு நாடாக மாற்ற புவி அறிவியல் துறையின் சாா்பில் முழு முனைப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும். நமது கண்டுபிடிப்புகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி, மொத்த உலகத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். கடல் வள பாதுகாப்பு குறித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

சென்னை துறைமுகத்தில் ஆய்வு:

சென்னைத் துறைமுகத்துக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்த அமைச்சா் கிரண் ரிஜிஜு, தேசிய கடல்சாா் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுக் கப்பல்களான சாகா் அன்வேஷிகா மற்றும் ஓஆா்வி சாகா்நிதி ஆகியவற்றை பாா்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா் தேசிய கடல்சாா் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்த கப்பல் கண்காணிப்பு அமைப்பு (ஷிப் டிராக்கிங் சிஸ்டம்) செயலியை அமைச்சா் தொடங்கி வைத்தாா். இந்த ஆய்வின் போது சென்னை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT