இந்தியா

ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் லேசான நிலநடுக்கம்

9th Jun 2023 10:30 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.9 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. காலை 10.23 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சில விநாடிகள் நீடித்தது.

லடாக்கை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அதிா்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வெட்டவெளிப் பகுதியில் குவிந்தனா். நிலநடுக்கத்தின்போது வீடுகளில் இருந்த பொருள்கள் லேசாக அதிா்வதைக் கண்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT