இந்தியா

அரபிக் கடலில் வலுவடையும் அதி தீவிர புயல்!

8th Jun 2023 10:19 AM

ADVERTISEMENT

 

அரபிக் கடலில் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பைபார்ஜாய் அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக மேலும் தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலால் மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அரபிக்கடல் பகுதிகளில் நேற்று முன் தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.

ADVERTISEMENT

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன் தினம் காலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம் நேற்று முன் தினம் இரவு 8.30 மணிக்கு புயலாக மாறியது. இந்த புயலுக்கு பைபார்ஜாய் என பெயரிடப்பட்டுள்ளது.

புயலானது நேற்று காலை வடக்கு நோக்கி நகர்ந்து அதி தீவிர புயலாக வலுவடைந்தது. தற்போது அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள இந்த புயல், அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் படிப்படியாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசையில் நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT