இந்தியா

உண்மையை மறைக்கவே ஒடிசா ரயில் விபத்து வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு: மம்தா குற்றச்சாட்டு!

DIN

ஒடிசா ரயில் விபத்தில் உண்மையை மறைக்கவே வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 

மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கடந்த ஜூன் 2-ஆம் தேதி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 288 பேர் உயிரிழந்ததாக ஒடிசா மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். 

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உண்மையை மறைக்கவே வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பேசிய மம்தா பானர்ஜி, ரயில் விபத்து பற்றி மத்திய அரசு ஒவ்வொரு நாளும் ஒரு தகவலை கூறுவதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT