இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: பிகார் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

8th Jun 2023 01:16 PM

ADVERTISEMENT

 

ஒடிசாவின் பாலாசோரில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பிகார் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரழிவு மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. 

பிகார் பேரழிவு மேலாண்மைத் துறையின் தகவலின்படி, 

ஒடிசாவில் கடந்த ஜூன் 2-ம் தேதி ஏற்பட்ட ரயில் விபத்தில் பிகாரைச் சேர்ந்தவர்கள் 50 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்றுவரை 40 பேர் பலி என்று கூறப்பட்ட நிலையில், இன்று மேலும் அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

ரயில் விபத்தில் சிக்சிய 19 பேர் காணமால் போயுள்ளனர். 43 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

படிக்க: பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படையினர்!

பிகாரைச் சேர்ந்த 50 பேரில், முசாபர்பூர்(9), மாதுபானி(6), பகல்பூர்(7), கிழக்கு சம்பரன்(5), பூர்னியா (2), மேற்கு சம்பரன்(3), நவாடா(2), தார்பாங்கா(2), ஜமுய்(2) சமஸ்திபூர்(3), பாங்கா(1)பீப்குசாரை(1), கயா(1), காகாரியா(3), சார்ஷா(1), சிதாமரிஹி(1), முங்கர்(1) ஆகிய மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது. 

பிகார் அரசு நான்கு அதிகாரிகளைக் கொண்ட குழுவை பாலாசோருக்குக்கு அனுப்பியுள்ள நிலையில், இறந்த உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT