புது தில்லி: பிகார் மற்றும் ஜார்க்கண்டின் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஎ) சோதனை நடத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 2018 அன்று போக்தா கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். பிகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மடங்பூர் என்ற இடத்தில் படாய் பிகா கிராமத்திற்கு அருகில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
படிக்க: கள்ளக்காதல் தொல்லை: குடும்பத்துடன் சேர்ந்து இளைஞரைக் கொன்ற இளம்பெண்!
நரேஷ் சிங் போக்தாவை சிபிஐ(மாவோயிஸ்ட்) கொலை செய்தது தொடர்பாக பிகார் மற்றும் ஜார்க்கண்டில் குற்றம் சாட்டப்பட்டவரின் வளாகத்தில் தேடல் வேட்டையை என்ஜஎ நடத்தியுள்ளது.