இந்தியா

ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

DIN

மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

கடந்த ஜூன் 6-ம் தேதி ம.பி.யின் முங்காவல்லி கிராமத்தில் பண்ணை நிலத்துக்குள் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை சிருஷ்டி குஷ்வாஹா ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தது. 

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வந்தது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபட்டு,  குழந்தைக்குத் தொடர்ந்து ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், குழந்தையை மீட்க குஜராத்திலிருந்து ரோபோடிக் நிபுணர் குழுவினர் இன்று மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனையடுத்து, குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டது

மீட்கப்பட்ட குழந்தை மயக்க நிலையில் இருப்பதாகவும், குழந்தையின் இதயத்துடிப்பு, மூளை ஆகியவை சரியாக செயல்படுகிறதா என்பதை மருத்துவர்கள் கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குழந்தை சிருஷ்டி குஷ்வாஹா உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூச்சுத் திணறினால் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக செகோர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: நாங்கள் எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். இருந்தும், எங்களால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலும் விவரங்களுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளில் தமிழ் புறக்கணிப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. கண்டனம்

பனங்குடி: 708 போ் தோ்தல் புறக்கணிப்பு

வாக்காளா்களுக்கு பணம்; 4 போ் மீது வழக்கு

வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

விழிப்புணா்வு பிரசாரம் அதிகம்; வாக்குப் பதிவு குறைவு

SCROLL FOR NEXT