இந்தியா

ஆந்திரத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும்

DIN

விசாகப்பட்டினம்: மாநிலத்தில் நிலவும் குறைந்த வெப்பமண்டல மேற்கு மற்றும் தென்மேற்கு காற்றின் காரணமாக இடி மற்றும் மின்னலுடன் கூடிய வெப்ப நிலை அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (அமராவதி) தெரிவித்துள்ளது.

அனகாபள்ளி மாவட்டத்தின் நாதவ்ரம் மண்டலம், காக்கிநாடா மாவட்டத்தின் கோதநந்துரு மற்றும் ரௌதுலபுடி மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும் என்று ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கணித்துள்ளது. அதேசமயம் 229 மண்டலங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

ஸ்ரீகாகுளம், விஜயநகரம், பார்வதிபுரம், அல்லூரி சீதாம ராஜு, காக்கிநாடா, கொனசீமா, கோதாவரி, ஏலுரு, கிருஷ்ணா, என்.டி.ஆர், குண்டூர், பாபட்லா, பால்நாடு மற்றும் பிரகாசம் மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று அதிகபட்ச பகல்நேர வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என  தெரிவித்தது.

கூடுதலாக விசாகப்பட்டினம், அனகாபள்ளி, நெல்லூர், கர்னூல், நந்தியாலா, ஒய்.எஸ்.ஆர் மற்றும் திருப்பதி மாவட்டங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அனந்தபூர், ஸ்ரீ சத்யசாய், அன்னமய்யா மற்றும் சித்தூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஐந்து மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் 87 மண்டலங்களில் வெப்ப அலை நிலவுகின்றது. ஏலுரு மாவட்டத்தின் காமவரப்பு கோட்டாவில் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பாபட்லா மாவட்டத்தின் கோப்பேரபாடு பகுதியில் 44.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.  என்.டி.ஆர் மாவட்டத்தின் சில்லக்கல்லு மற்றும் பெனுகஞ்சிபோலுவில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பிரகாசம் மாவட்டத்தின் குரிசேடு, ஏ.எஸ்.ஆர் மாவட்டத்தின் கொண்டைகுடம் மற்றும் பல்நாடு மாவட்டத்தின் ஜங்கமகேஸ்வரபுரத்தில் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. 

இதற்கிடையில் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், அனகாபள்ளி, பால்நாடு, பார்வதிபுரம், மான்யம் மற்றும் நந்தியாலா மாவட்டங்களின் பல பகுதிகளில் மழை பெய்தது. அதே வேளயில் விசாகப்பட்டினம் மற்றும் அனகாபள்ளி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்றும் பதிவாகியுள்ளது. விசாகப்பட்டினத்தின் புறநகரில் ஒரு சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT