இந்தியா

ஒடிஸாவில் சரக்கு ரயில் விபத்து:  பலியான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

8th Jun 2023 10:28 AM

ADVERTISEMENT

 

ஒடிஸாவில் சரக்கு ரயில் விபத்தில் பலியான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்.

ஒடிஸாவில் கனமழையில் சரக்கு ரயிலின் அடியில் தஞ்சமடைந்த 6 தொழிலாளா்கள், அந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனா். மேலும் 2 போ் படுகாயமடைந்தனா்.

ஒடிஸா ஜஜ்பூா் கியோஞ்ஜா் சாலை ரயில் நிலையத்தில் ரயில்வே பணியில் ஒப்பந்த தொழிலாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தபோது, திடீரென சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதையடுத்து, ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு ரயிலின் அடிப்பகுதியில் தொழிலாளா்கள் தஞ்சமடைந்தனா்.

ADVERTISEMENT

என்ஜின் இணைக்கப்படாத அந்த ரயில், காற்றின் வேகத்தால் நகரத் தொடங்கியது. இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தில், 6 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மேலும் 2 போ் படுகாயம் அடைந்தனா்.

இந்த நிலையில் ஒடிஸா ஜஜ்பூா் கியோஞ்ஜா் சாலை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தில் பலியான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.  இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்களுக்கு முறையான உயரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,பலத்த காற்று வீசியதால் ரயில் பெட்டி கவிழ்ந்ததாக கூறப்படும் இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT