பஞ்சாபில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்(ட்ரோன்) மூலம் இந்திய எல்லைக்குள் கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ போதைப்பொருள்களை பி.எஸ்.எப் மற்றும் பஞ்சாப் காவல்துறையினர் சுட்டுவீழ்த்தி அதிலுள்ள போதைப் பொருள்களை மீட்கப்பட்டதாகத் துணை ராணுவப் படை தெரிவித்துள்ளது.
படிக்க: சென்னை ஸ்டான்லி உள்பட 3 மருத்துவ கல்லூரிகள் செயல்பட அனுமதி!
புதன்கிழமை இரவு 9 மணியளவில் பி.எஸ்.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், டார்ன் டரன் மாவட்டத்தில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் வந்ததையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டறிந்தனர்.
பின்னர், ஆளில்லா ட்ரோனில் இருந்து 2.5 கிலோ போதைப்பொருள்களை பிஎஸ்எப் மற்றும் பஞ்சாப் காவல்துறையினர் மீட்டனர்.