இந்தியா

இந்திய கல்வி முறையை ஆங்கிலேயர்கள் அழித்து விட்டனர்: அரவிந்த் கேஜரிவால்

8th Jun 2023 04:16 PM

ADVERTISEMENT

ஆங்கிலேயர்கள் இந்திய கல்வி முறையை அழித்து விட்டதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆங்கிலேயர்களின் நிர்வாக வேலைகளை கவனித்துக் கொள்ளும் எழுத்தர் பணிக்காக இந்தியர்களை பயன்படுத்திக் கொண்டதாக கூறிய அவர், மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் எனத் தெரிவித்தார். தில்லியில் குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக் கழகத்தின் கிழக்கு தில்லி வளாகத்தை திறந்து வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

இதையும் படிக்க: இன்ஸ்டாகிராம், முகநூல் புளூடிக்: மாதம் ரூ.699 கட்டணம்! மெட்டா அறிவிப்பு!

அப்போது அவர் பேசியதாவது: இந்த வளாகத்தில் சிறப்பான வசதிகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. கட்டட அமைப்பை பொறுத்தவரையில் இந்த வந்த புதிய வளாகம் நாட்டில் உள்ள சிறந்த வளாகங்களில் ஒன்றாகும். இந்த வளாகம் 2,500 மாணவர்களுக்கு இடமளிக்கும். இந்த புதிய வளாக திறப்பின் மூலம் பொருளாதார வாய்ப்புகள் உருவாகும். இந்த வளாகத்தினை சுற்றி புதிய கடைகள் திறக்கப்படும். இதன்மூலம், வேலைவாய்ப்புகள் உருவாகும். நாங்கள் பள்ளி படிப்பின் மாதிரியை உருவாக்கியுள்ளோம். அதில் பண வசதி இல்லாதவர்களும் தங்களது குழந்தைகளுக்கு கல்வியை வழங்க முடியும். தற்போது நாங்கள் உயர் கல்வியில் கவனம் செலுத்தி வருகிறோம். ஆங்கிலேய அதிகாரி மெக்காலேவால் உருவாக்கப்பட்ட கல்வி முறை இந்தியர்களை ஆங்கியேர்களின் நிர்வாகத்துக்கு உதவும் எழுத்தர் பதவிக்கு மட்டுமே தயார் செய்தது. எழுத்தர்களை உருவாக்குவதற்காக ஆங்கிலேயர்கள் இந்திய கல்வி முறையை அழித்து விட்டார்கள். நாம் இந்த கல்வி முறையில் மாற்றங்களை செய்யவில்லை. வேலைவாய்ப்பினை கொடுக்கும் கல்வி கிடைக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: ரோபோ உதவியுடன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்க முயற்சி!

இந்த வளாகத்தில் மாணவர்களுக்கு ஆட்டோமேஷன், டிசைன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், இந்தியர கற்றல், தரவு மேலாண்மை மற்றும் பல புதுமையான விஷயங்கள் கற்றுத் தரப்படும். இந்த தொழில்நுட்ப உலகில் இதுபோன்ற கல்விதான் மாணவர்களுக்கு தேவை. பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுவதன் மூலம் நாடு முன்னேற்றமடையும் என சிலர் கூறுவார்கள். ஆனால், புதிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை உருவாக்குவதே நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT