இந்தியா

பிகார் மாநிலத்தில் தூணுக்கும் ஸ்லாப்புக்கும் இடையே சிக்கிய சிறுவன் உயிரிழப்பு!

DIN

பிகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் பாலத்தில் தூணுக்கும், ஸ்லாப்புக்கும் இடையில் சிக்கிய 11 வயது சிறுவன் இன்று உயிரிழந்தான். சுமார் 12 முதல் 14 மணி நேரம் நீடித்த மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அவனது உடலை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,  சிறுவனை மீட்கும் நடவடிக்கை நேற்று தொடங்கியது. இதுகுறித்து பிக்ரான்கஞ்ச் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் உபேந்திர பால் கூறுகையில், பாலத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பணி சுமார் 12 முதல் 14 மணி நேரம் நீடித்தது என்றார்.

இது குறித்து மருத்துவர் கூறுகையில், சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து வரும் முன் இறந்து விட்டதாக தெரிவித்தார். தேசிய பேரிடர் மீட்பு படையினர் சிறுவனின் உடலை மீட்க 8 முதல் 10 மணி நேரத்திற்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக சிறுவனின் தந்தை சத்ருதன் பிரசாத் கூறுகையில், தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாகவும் தெரிவித்தார்.

சிறுவனைத் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சோன் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தின் தூண் எண் 1ல் ஸ்லாப் இடையில் சிறுவன் சிக்கியிருப்பதாக ஒரு பெண் தெரிவித்ததாக அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT