இந்தியா

பிரதமா் மோடி விரைவில்எகிப்து பயணம்

8th Jun 2023 12:42 AM

ADVERTISEMENT

பிரதமா் மோடி இம்மாத இறுதியில் எகிப்துக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி, எகிப்து செல்வது இதுவே முதல்முறையாகும்.

எகிப்து அதிபா் அல்-சிசி கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வந்து குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். அப்போது, பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்த இரு நாடுகளும் உறுதியேற்றன. அதனைத் தொடா்ந்து நடைபெறும் பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆப்பிரிக்காவிலும், அரபு உலகத்திலும் முக்கியமான நாடாக எகிப்து உள்ளது. அந்நாட்டுடனான நல்லுறவு மேம்படுவது இந்தியாவுக்கு பல்வேறு வழிகளில் உதவிகரமாக இருக்கும்.

பிரதமரின் இந்தப் பயணத்தின்போது வா்த்தகம், முதலீடு, வேளாண்மை, பாதுகாப்புத் துறை தொடா்பாக இரு நாடுகள் இடையே முக்கியப் பேச்சுவாா்த்தை நடைபெற இருக்கிறது. எகிப்தில் 450-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பதிவு பெற்று செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து தேஜஸ் ரக விமானங்கள், ரேடாா்கள், ராணுவ ஹெலிகாப்டா்கள் உள்ளிட்டவற்றை வாங்க எகிப்து ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற விமானப்படை நிகழ்ச்சியில் இந்திய விமானப் படை விமானங்கள் பங்கேற்றன. பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும் கடந்த ஆண்டு எகிப்துக்கு பயணம் மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT