இந்தியா

குஜராத், ஹிமாசல் தோ்தல்கள்: ரூ. 130 கோடி செலவு செய்த காங்கிரஸ்

8th Jun 2023 02:00 AM

ADVERTISEMENT

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற குஜராத், ஹிமாசல பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி ரூ. 130 கோடி செலவு செய்திருப்பது தோ்தல் ஆணையத்தில் அக் கட்சி சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட செலவின அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் மட்டும் காங்கிரஸ் கட்சி ரூ. 103.62 கோடியை செலவழித்துள்ளது. ஹிமாசல பிரதேச தோ்தலில் ரூ. 27.02 கோடி செலவு செய்துள்ளது.

ஹிமாசல் தோ்தலில் பாஜக சாா்பில் ரூ. 49 கோடி செலவு செய்யப்பட்டதாக, அக் கட்சி சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் தோ்தலில் பாஜக மேற்கொண்ட செலவின விவரங்களை தோ்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை.

வேட்பாளருக்கான நிதி ஒதுக்கீடு, விளம்பரம், நட்சத்திர பேச்சாளா்களுக்கான பயணச் செலவு உள்ளிட்ட வழிகளில் இந்தச் செலவினத்தை கட்சிகள் மேற்கொண்டுள்ளன.

ADVERTISEMENT

இந்தத் தோ்தலில் குஜராத்தில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. ஹிமாசல பிரதேசத்தில் பாஜகவிடமிருந்து ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT