இந்தியா

நரசாபூா் - பெங்களூரு வாராந்திர ரயில் சேவை ஜூன் முழுவதும் நீட்டிப்பு

8th Jun 2023 01:10 AM

ADVERTISEMENT

ஒடிஸா மாநிலம் நரசாபூரிலிருந்து பெங்களூருவுக்கு காட்பாடி வழியாகச் செல்லும் வாராந்திர ரயில் சேவை ஜூன் மாதம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

ஒடிஸா மாநிலம் நரசாபூரிலிருந்து பெங்களூருவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 07153) வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக பெங்களூருயிலிருந்து நரசாபூருக்கு இந்த ரயில் (வண்டி எண்: 07154) ஜூன் 10 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படும். இந்த ரயில் ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக பெங்களூருக்கு செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT